பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

நான் சாப்பிடப் போவதில்லை’ என்று அந்த அம்மையார் வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். ‘

தலைமை ஆசிரியை இப்படி கூறியதும் எனக்கு தி.கீரென்றது. காணாமல் போன ஸ் கிரிப்டுக்காக, கண் கலங்குவது எதற்கு? அது போகட்டும். இன்னொன்றை இப்பொழுதே எழுதித் தருகிறேன் என்று, ஒரு பேப் பரை எடுத்துக் கொண்டு எழுத அமர்ந்துவிட்டேன்.

அலட்சியமாக என் கவிதையை வாங்கிய அந்த அம்மையாருக்கு, இப்படி ஒரு அக்கறை ஏற்பட்டு, ஒரு வித ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டதே எனக்கு வெற்றிதானே! அதனால், என் மகிழ்ச்சியான மனதில் காணாமல் போன விவகாரம், மாறுதல் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.

நினைவில் கொஞ்சம் பாட்டுக்கள் நிலைத் திருந்ததால், விடுவிடென்று 30,40 வரிகளை எழுதி முடித்து நிமிர்ந்தபோது, இன்னொரு வியப்பு எனக்காகக் காத்திருந்தது.

உங்கள் ஸ்கிரிப்ட் பாண்டிச்சேரியிலிருந்து வந்துவிட்டது. அவர்களே உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் அந்த செய்தி.

அவர்கள் வந்து என்னிடம் பாடல்களின் நயம் பற்றி பேசி, பாராட்டிச் சென்ற விதம், மற்றவர்கள் என் கவிதை ஆற்றலை நன்கு புரிந்து கொள்ளச் செய்தது. அப்பொழுது என் உடனிருந்த நண்பர். ஆசிரியர் திரு சீனிவாசன் அவர்கள், இந்தக் கவிதையை இப்படியே விட்டுவிடக்கூடாது, இதற்கு நான் ஒரு ஏற்பாடு செய்கிறேன் என்றார். அந்த ஏற்பாடு என்ன என்று நானும் கேட்கவில்லை , அவரும் சொல்லவில்லை.

ஒரு மாதம் கழித்து டெல்லியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அனுப்பியவர் டெல்லி ஆல் இண்டியா ரேடி , டைரக்டர் சி - கிருஷ்ணசாமி அவர்கள், எழுதிய கடிதம், அது.