பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

ஒடினுள். உச்சி வெயிலையும் உருகியோடும் தாரின் சூட்டையும்கூட சற்றே விலகியிருக்கும் பிள்ளாய் ! என்று பணித்துத் தான் காரில் விரைந்து வந்தபோது, தம் கண்களை வீசி, தன் கண்களைப் பிடுங்கித் தின்று விடுவது போன்ற பார்வையைப் பதித்த முப்பத்து மூன்று கயா பைசா ரசிக மகாஜனங்களைப் பற்றின எண்ணம் மாருமல் இருந்ததால்தான் அப்படி அவள் தப்பித்தோம் ; பிழைத்தோம்’ என்று எண்ணி ஒட வேண்டியவள் ஆனுள். . .

உணவு அறையில் சாப்பிட உட்கார்ந்தாள் அவள். உணவு கொண்டாள்; முடித்தாள். சாம்பார்; இரண்டு தேயிலைக் கரண்டி அளவுக்குத் துளி ரசம். மோர் போட்டுக்கொள்ளவில்லை. படப் பிடிப்பில் தொண்டை கட்டி விடுமல்லவா ? சகுந்தலை, துஷ்யக் தன் சந்திப்புக் கட்டத்தில் மத்தியான்னம் அவள் வசனம் பேசியாக வேண்டுமே...?

உறைக் கடிதம் ஒன்று தலை நீட்டிற்று பிரித் தாள் ; உள்ளுறை இதயம் காட்டியது.

அன்புள்ள குமாரி தமிழரசி அவர்களுக்கு, வணக்கம். - நேற்று முன்னேய தினம் காதல் போயில் சாதல் : சித்திரத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நான் திரும் பவும் உங்களுக்கு ஞாபகப்படுத்திய விஷயத்தைத்தான் இப்போதும் தெரிவித்திருக்கிறேன். என்வரை, காத லுக்கும் தெய்வத்துக்கும் ஒரே பொருள் இருப்பதாகவே கருதுகிறேன். தெய்வத்தை நேரில் காணமுடியாத தால், தெய்வமே இல்லை என்று சொல்லி வரும் சில விந்தை மனிதர்களின் பட்டியலில் என்னேயும் சேர்த்து