பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

விடாதீர்கள். ஒவ்வொரு மனித மனத்திலும் தெய்வம் இருக்கிறது; தெய்வத்தன்மை பரிபக்குவம் எய்து, கிறது. அதே போலத் தான் காதலும் ! காதல் என்ற சொல்லடுக்கிலே காதல் பிறப்பதோ, பிறப்பதாகக் கருதுவதோ, பிறக்க முடியுமென்று எதிர்பார்ப்பதோ தவறு. பண்பட்ட உள்ளங்களின் ஒருமித்த சங்கமத், தில்தான் காதல் என்ற புனிதத்தன்மை விடி பொழுதைக் காட்ட முடியும்; அப்போதுதான் வைகறையின் துய்மையை-ஓடக்காணும் பூம்புனல் வெள்ளத்தின் பூரிப்பை ஒப்பிட்டு நோக்க முடியும்.

“காதல் பிறந்தது’ என்ற திரையோவியத்தில், நீங்களும் நானும் முதன் முதலாக அறிமுகமானுேம்; அறிமுகப்படுத்தப்பட்டோம்; பொது உலகமும் அறி முகம் ஆனது; இப்போது வளர்ந்து கொண்டிருக். கின்ற காதல் போயில் சாதல் 1’ எனும் திரையோவியம் வரை கழிந்த மூன்று வருஷங்களிலே கிட்டத்தட்ட பத்துப் படங்களிலே காம் இருவரும் சேர்ந்து கடித் திருப்போம்; நீங்கள் கதாநாயகி ; கான் கதாநாயகன் தமிழரசி-தமிழ் வேந்தன் இந்தப் பெயர் ஜோடியை ஜோடி சேர்த்துப் பார்த்து மகிழும் பொது ஜனங்கள் எத்தனை பேரோ? அத்தகைய பொதுமக்களிலே ஒருவ கை இயக்கப்பட்டு, இயங்கி, இந்தப் பெயர் இணையைக் கண்டு இனம்பிரித்து, இனம் சேர்த்து என்னுள் கானே மகிழ்ந்த நாட்கள் ஏட்டிலடங்கா !

அந்த இன்ப நாட்களுக்கு நீங்கள் ஒரு நல்ல தீர்ப்பு வழங்குவீர்களேயானல், அது என் உள்ளத்துக்குமட்டு, மல்ல, உருவத்துக்கும் உயிர்ப்பும் துடிப்பும் வழங்கும்.

ஒரு பெண் பூரணமடைவது தன் பதியின் நிழலில் தான் என்று யாரோ எழுதியதைப் படித்திருக்கிறேன்.