உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கேதம் மாற்றிடும் விளையாட்டு கேசரி ஆக்கிடும் விளையாட்டு கேட்கச் சுவைப்பது விளையாட்டு கேட்டதைக் கொடுப்பது விளையாட்டு கேடரைத் திருத்திடும் விளையாட்டு கேளிரை நிறைப்பது விளையாட்டு கேள்விஞானம் தரும் விளையாட்டு கேளிக்கை மிகுந்தது விளையாட்டு கேணம் கொடுப்பது விளையாட்டு கேண்மை வளர்ப்பது விளையாட்டு கேட்டொறும் சுவைநயம் விளையாட்டு கேண்மையர் ஆக்கிடும் விளையாட்டு கேடகம் வாழ்வுக்கு விளையாட்டு கேடயம் ஆவதும் விளையாட்டு

அரும்பொருள்: - கேதம்-துன்பம் கேணம்-செழிப்பு கேசரி-அரிமா கேண்மை-நட்பு கேளிர்-உறவினர் கேடகம்-பாசறை

கேண்மையர்-தன்மையர்