உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

விளையாட்டு ஆத்திசூடி

6Ꮈö{Ꭲ

கொள்கையை வளர்க்கும் விளையாட்டு கொளுகொம்பு ஆவதும் விளையாட்டு கொஞ்சும் மழலைபோல் விளையாட்டு கொடைவள்ளல் போன்றது விளையாட்டு கொண்டலாய் உதவும் விளையாட்டு கொட்டிக் களிப்பதும் விளையாட்டு கொண் மூ போன்றது விளையாட்டு கொடிமரம் இளமைக்கு விளையாட்டு கொடைமடம் பண்புக்கு விளையாட்டு கொட்டாரம் திறமைக்கு விளையாட்டு கொண்டியம் மாற்றிடும் விளையாட்டு கொழுலாபம் இன்பமே விளையாட்டு கொடுந்துயர் மாற்றிடும் விளையாட்டு கொடைமணம் கொடுப்பதே விளையாட்டு

அரும்பொருள்:

கொண்மூ-ஆகாயம், மேகம் கொடிமரம்-கொடிக்கம்பம்

கொட்டாரம்-முதல்வாசல் கொண்டியம்-பகைமை, வருத்தம்