பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. .எஸ். நவராஜ் செல்லையா 7

இகத்தினில் சுகந்தரும் விளையாட்டு இனிய நல் வழிதரும் விளையாட்டு இதயத்தின் செழுமைக்கு விளையாட்டு இரத்தத்தின் தூய்மைக்கு விளையாட்டு இல்லாமை தீர்த்திடும் விளையாட்டு இயலாமை போக்கிடும் விளையாட்டு இன்னாரை திருத்திடும் விளையாட்டு இசைவாரை உயர்த்திடும் விளையாட்டு இசையாக மயக்கிடும் விளையாட்டு இன்பத்தை முழக்கிடும் விளையாட்டு இரும்பென உடல்தரும் விளையாட்டு இல்லாத இடமில்லை விளையாட்டு இதமான வாழ்வுக்கு விளையாட்டு இணையிலா செயலே விளையாட்டு