பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

29

வளர்ந்தது. ஆனாலும், வளர்ந்த குழந்தையை வாட்டுகின்ற விதி சும்மா விட்டு விடவில்லை.

எப்படியோ கொடிய நோயான ‘இளம் பிள்ளை வாதம்’ அந்தக் குழந்தைக்கு வந்துவிட்டது. ஆடி ஓடிக்களித்த குழந்தையின் கால்கள் அடங்கிக் கொண்டன. உடலோ படுத்த படுக்கையாகி விட்டது. உடன் ஓடிவந்த டாக்டர்களும் உற்ற உதவிகளைச் செய்து பார்த்து, கடைசியாகக் கைகளை விரித்து விட்டனர். ‘முடங்கிப் போன கால்களால் இனி நடக்க முடியாது’ என்று இறுதி மடல் வாசிப்பது போல, ஓதிவிட்டுச் சென்று விட்டனர் டாக்டர்கள். டாக்டரும் கை விட்ட பிறகு என்ன செய்ய முடியும்? ஆண்டவனை வேண்டிக்கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான் !

படுக்கையிலே கிடந்த சிறுவனின் மனதுக்குத் தெம்பினை ஊட்டுவதற்காக சில நல்லவர்கள் வந்தார்கள். “உடற்பயிற்சி செய்தால் உன் உறுதியற்ற கால்களுக்கு சற்று வலிவு கிடைக்கும். எழுந்து நிற்கவாவது முடியும்.” அவர்களின் வாக்கு அச்சிறுவனுக்குத் தேவவாக்காகப் பட்டுவிட்டது. வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு வைக்கோல் துரும்பைக் கண்டதும் தப்பிக்கத் துாண்டும் வலிய துணையாக உதவுவது போல, உடற்பயிற்சியை உண்மையாக, உளமார நம்பி அச்சிறுவன் பயிற்சி செய்யத் தொடங்கினான்.

உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தான்.விடாது செய்தான். நம்பிக்கையுடன் செய்தான். உறுதியான மனதுடன் செய்தான். பயன் கிடைக்குமா என்ற