பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


\() விளையாட்டு உலகம் காத்திடின்' என்று பாடத் தோன்றுகிறது ஒர்ட்டரைப் பார்த்து. பயிற்சியும் பழக்கமும் இல்லாமல், இடையிலே எட்டு ஆண்டுகள் பந்தயங்களில் கலந்து கொள்ளாமல் இப்பொழுதும் 198 அடிக்கு மேல் எறியக் கூடிய ஆற்றல் பெற்று விளங்கும் ஆல்பிரட் ஒர்ட்டரைப் பார்த்து, வரலாற்றுக் கதாநாயகனுக விளங்கும் மாவீரனே! வாழ்க கின் வலிமை! என்று வாழ்த்தத் தோன்றுகிறது அல்லவா! வாழ்க கின் வலிமை என்று வாழ்த்துவோம். வல்லமை மிக்க வீரனைப் போல் நம் நாட்டிலும் ஒரு சிலர் தோன்ற, காலம் கருணையுடன் வழியமைக்கட்டும் என்று சிரம் தாழ்த்துவோம்! வலிமையும் வல்ல மையும் தர இறைவனை வேண்டுவோம்,