பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சென்றபோது, அந்தப் பெண்ணைப் பின் தொடர்வாருக்கும் பெரிதும் துன்பமே மிகுதியாகப் போயிற்று.

5 ஆண்டுகளுக்குள்ளே 10 முறை, தன்னுடைய உலக சாதனையை உலக வரலாற்றிலேயே மாற்றி மாற்றி எழுதும் வண்ணம் வெற்றிபெற்று பெரும் சாதனை புரிந்தாள். 1971-ம் ஆண்டிலிருந்து 1974-ம் ஆண்டிற்குள்ளே சோவியத் நாட்டின் வெற்றி வீராங்கனையாக இரண்டு முறையும், ஐரோப்பா தேசத்தின் வெற்றி ராணியாகவும், 1972-ம் ஆண்டின் ஒலிம்பிக் பந்தயத்தின் தங்கப்பதக்கம் பெறுபவளாகவும் பெற்ற வெற்றிகள் கற்பனைக்கும் எட்டாத அற்புதமல்லவா!

229 அடி 4 அங்குல தூரம் எறிந்து உலக சாதனையை தட்டெறியும் போட்டியில் பொறித்திருக்கும் அந்தப் பருவ மங்கையின் பெயர் ஃபெய்னா மெல்னிக் (Fayina Mellik) என்பதாகும். உலக வரலாற்றிலேயே 70 மீட்டர் துாரத்தை முதன்முதலாக எறிந்தவர் என்ற பெரும்புகழைப் பெற்றிருக்கும் பெய்னா பிறந்த ஊர், சோவியத் நாட்டிலே உக்ரேய்னியன் எனும் பகுதியில் உள்ள பகோடர் எனும் சிறு கிராமம். பிறந்த நாள் 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதியாகும்.

கிராமப்புற கன்னியாக விளங்கிய மெல்னிக், பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிக் கல்விக்காக உக்ரேனியத் தலைநகரிலே கீவ் என்ற நகருக்கு வந்த போதுதான், இந்த அதிசயம் நடந்தது. விரும்பிய விளையாட்டை வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்தி விடவில்லை. ஆழ்ந்த அக்கறையுடன் நிதர்சனமான நம்பிக்கையுடன், பூமியும் வெட்கும் பொறுமையுடன் உழைத்தார் மெல்னிக்.5 ஆண்டுகளுக்குள்ளே அகிலமே வியக்கும் வண்ணம் அரிய சாதனை புரிந்த மெல்னிக்,