பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 17 காய்ந்த ரொட்டிகூட கிடைக்காமல் கஷ்டப்பட் கி2லயில் வளர்ந்த ஒரு வீரன், இந்த உலகமே பாராட்டும் வண்ணம் உழைப்பால் உயர்ந்தும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதே! யாரை நோக! அந்த அற்புத இளைஞன் தான், உலகத் தாரால் பறக்கும் சீக்கியர் என்று புகழப்பெற்ற மில்காசிங். எத்தனையோ இன்னலும் இடர்ப்பாடும் இருந்தாலும் எதிர்த்தாலும், இலட்சியத்தை உயிர் மூச்சாகக் கொண்டவர்களை எதுவும் செய்யமுடியாது’ என்று உலகுக்கு உணர்த்திய மாவீரன் மில்காசிங்கின் அதிர்ஷ்டம், அவ்வளவுதான் என்ருலும், காம் இன்னும் முயல்வோம். ஆயிரமாயிரம் மில்காசிங்குகளை உருவாக்க முயல்வோம். அரிய உழைப்பிற்கு அதிர்ஷ்டம் நிச்சயம் ஒருநாள் தலேதாழ்த்தியே தீரும். ஆக்தக் காலமும் வரத்தான் போகிறது!