பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
58
 

23. வார்னிஷ் விளையாடுகிறது!

கிரிக்கெட் ஆட்டத்தில், எதிராட்டக்காரர் காத்து நின்று ஆடுகின்ற விக்கெட்டை, பந்தால் அடித்து வீழ்த்திபந்தடித்தாடும் ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்வதுதான் முக்கிய நோக்கம் என்பது எல்லோரும் அறிவார்கள்.

ஆனால், நடந்தது என்ன? அதைத் தொடர்ந்து நடுவர்அளித்த முடிவுதான் என்னஎன்று நீங்கள் அறிந்தால், மிகவும் ஆச்சரியப் படுவீர்கள். இப்படி ஒரு நீதியா என்று எரிச்சல் அடைவதுடன், நடுவரைக் 'கன்னா பின்னா' என்று பேசவும் தலைப்படுவீர்கள்.

அப்படி என்ன நிகழ்ந்தது என்று கேட்கின்றீர்களா? நியூசவுத் வேல்ஸ் என்ற குழுவிற்கும் விக்டோரியா என்ற குழுவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

அந்தப்போட்டியில், ஒரு பந்தெறியாளர் (Bowler) எறிந்த பந்தானது, எதிராளி காத்து நின்ற விக்கெட்டில் மோதி, நடுக்கம்பான குறிக்கம்பைத் (Stump) தள்ளி விழச்செய்து விட்டது.

விக்கெட் விழுந்து விட்டால், அவர் ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவித்துவிட வேண்டியதுதானே! ஆனால், அந்த அந்த நடுவரே ஆட்டமிழக்கவில்லை (Not out) என்று அறிவித்து விட்டு, அந்தப் பந்து 'முறையிலா பந்தெறி' (No Ball) என்றும் கூறிவிட்டார்.

ஏன் அப்படி அறிவித்தார் என்று பார்த்தோமானால், விக்கெட்டில் இருந்த மூன்று குறிக்கம்புகளை இணைக்கும் இணைப்பான்கள் (Bails) கீழே விழவில்லை, இணைப்பான்கள் கீழே விழுந்தால்தான் விக்கெட் விழுந்தது என்று அறிவிக்கவேண்டும் என்ற ஒரு விதி இருக்கும் பொழுது, நடுவர் விதிக்கு மாறாக மீறி எவ்வாறு அறிவிப்பார்!