பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102

முன்பக்கச் சாய்வும் சரிவும், அத்துடன் பக்க வாட்டில் அமையப் பெற்ற காலிணைப்புக்கள் பந்துக்கிண்ண மூட்டின் வகையும்தான் என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆய்ந்த கருத்தாகும். ஒடி வரும் நீக்ரோக்கள் ஒவ்வொரு காலடியையும் எளிதாக, விரைவாக ஒருவித லாவகத்துடன், நளினத் துடன் எடுத்து வைக்கின்றனர். வெள்ளையர்கள் போன்ற மற்ற ஒட்டக்காரர்கள் முழங்கால் மூட்டின் அமைப்பு பக்கவாட்டில் விரிவது போல வந்து, கால்கள் இடித்துக்கொள்வது போலவும், பாதங்களும் பக்க வாட்டில் விரிந்து போவது போலவும் மாறி வருவதால்அவர்களின்ஒட்டம்அத்தகையசீராகஅமைந்துஇருக்கவில்லை என்ற கருத்தையும் இங்கேஎடுத்துரைக்கின் ருர்.

இயற்கையின் இனிய பரிசு ஆகவே, நீக்ரோக்களின் உடலமைப்பு இயற்கை அன்னே அளித்த இனிய சீதனமாகும். வாழ்க்கை முறை யின் வன்மைகள் வலிய உடலையும், நிறைந்த கெஞ்சுரத் தையும் அளித்தனவாகும். அத்துடன் அவர்கள் மேற். கொண்ட பயிற்சியும், முயற்சியும், கோக்கமும், ஊக்க மும், அவர்கள் கன்ருக ஒட உதவுகின்றன. பல்லோர் புகழும் பெருமைகளையும், சிறப்புக்களையும் வாரி வழங்கு கின்றன.