பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. முதுமைக்கு முன்னுல்!

முதுகில் ஏறியிருக்கும் முதுமை

முதுமை என்பது புதுமையானதல்ல. பிறந்த உயிர்கள் அனைத்துக்கும் இளமையும் முதுமையும் என்றும் சொந்தமே !

இளமையில் வாழும் நமக்கு வளமையான தேகம், வலிமையான இதயம், இனிமையான நினைவுகள், அருவி யென கடை, முரசெனக் குரல், ஆண்மைமிகு இயக்கம், இயற்கையின் நடைமுறையில் மயக்கம்.

இவ்வாறு வாழ்க்கை, இளமையில் பசுமையாகத் தொடங்குகிறது. புதிய பணக்காரனைப் போல வாழ்வு பரபரப்பினைப்பெறுகிறது. தேனிபோல சுறுசுறுப்பினில் மிளிர்கிறது. அவனது ஆசை வேகத்திற்கும், இன்ப யூகத்திற்கும் தேகம் ஈடுகொடுக்க இயலாமல் பல சமயங்களில் திணறுகிறது-திண்டாடுகிறது.

இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்ற வேகத் திற்கும், வெறி உணர்வுக்கும் இடையில் உடல் ஊச