பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 லாடும்போது, வாழ்வின் நோக்கம் என்ன என்று இளைஞர்கள் புரிந்து கொள்வதும் இல்லை. முயன்று புரிய வைப்போரிடம் இருந்து கேட்கும்வரை அவர் களுக்குப் பொறுமையும் இல்லை.

ஒருநாளில், ஒடிக்களித்துக் களைத்தபின் நமக்கு வய தாகி விட்டதென்ற உணர்வு வருகிறது. ஏன் வந்து விட்டது? என்று நினைப்பிலே, மனதிலே குழப்பம். இதோ! முதுமை உடலை மூடுகிறது, அதற்கு எத்தனை விரைவு பாருங்கள்! மூடுபனிபோல வரும் முதுமை, உடலை எத்தனை வழியில் சாடுகிறது?

முதுமையின் அறிகுறி

தலைமுடி உதிரத் தொடங்குகிறது. அடர்த்தியும் சிதைகின்றது. கருமை மாறி முடியின் நிறத்தில் வெண்மை குடி புகுகின்றது. நிமிர்ந்து நின்ற தோள் கள் சரிந்து விழுகின்றன. மேலும் மேலும் குவிந்து கொள்கின்றன. தோலின் மினுமினுப்புக் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைகின்றது. சுருங்கவும் ஆரம்பித்து வளையம் போடுகின்றன. நடையிலே ஒரு தளர்வு. உள்ளத்திலும் ஒருவித வெறுமை உணர்வு.

முதுமை மூட வருகிறது என்பதற்கு அறிவிக்கும் முதல் மணி ஓசைதான் மேலே கூறிய சான்றுகள் மனிதன் இவைகளின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வ தில்லை. இளமையில் இருக்கிருேம் என்று திமிருடன் நினைக்கிருன். இளைஞனுகவே செயலில் ஈடுபடுகிருன். எந்தக் காரியமாக இருந்தாலும் அசட்டுத் துணிச்சலுடன் எதிர்கொள்கிருன். ஏற்றுக் கொள்கிருன். சவால் விடு கிருன். சங்கடத்துடன் சமாளிக்கிருன் ஏனோதா வென்று சாதிக்கமுயல்கிருன் ஏன்? மேலேகூறிய முதல்