பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 அறிவுடன் வாழ்வோம்

  • . ஆகவே, அறிவுள்ளவர்கள் நிதானமாக வாழ்கின் றார்கள். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி இரு க் கும் காலம் வரை நோயால் வருந்தாமல், நலிவால் வேதனை யுறாமல், நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நினைவுடன் உடல உயர்ந்த பொருளாக எண்ணிக் காத்து வாழ்ந்து மகிழ் கின்றனர்.

ஒட்டைப் படகில் உல்லாசமாகப் போக முடியுமா? வாழ்க்கை என்னும் வெள்ளத்தில், வலிமையான தேகப் படகுதான் விரைந்து முன்னேற முடியும். மிதந்து கரை சேர முடியும் . ஆகவே உடலைக் காக்கும் பணியை மேற்கொள்ள முயல்பவரே உயர்ந்த வாழ்வினை வாழ முடியும் எனற முடிவுக்கு வந்தவர்கள் நமது சித்தர்கள். நாகரீகம் இன்று நம்மை சூழ்ந்து கொண்டிருந்தாலும், முது மைக்கு முன்னால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; நிச்சயம் நாம் அந்த நிலைக்கும் ஒருநாள் ஆட்படத்தான் போகின்றோம்.

அந்த நிலை வரும்பொழுது நாம் களைத்துப் போகா மல், வருத்தப்படாமல், வாழ வேண்டும் என்றால், தேகத்தை இன்றே தயார் செய்துகொள்ள வேண்டும். தகுந்த பாதுகாப்பு-ன் கலந்துகொள்ள வேண்டும்! பொன்னைப்போல் உடலைப் போற்றி, கண்ணைப்போல் கருத்துடன் காத்து, காலமெலாம் வளர்த்து வந்தால் தான் இளமையும் இனிக்கும். முதுமையும் இனிக்கும்.

உடலுக்குப் பயிற்சிமுறை உண்டு. ஒழுங்காக நேரத்திற்கு உட்கொள்ளும் உணவுமுறை உண்டு.