பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
31

 என்று களைத்த உடல் தேடி வந்து அணைத்து சுகம் காட்டும் தென்றல்...அங்கு ஆடுகளத்தில் பெறும் இன் பத்தைப் பகர்ந்தால் புரியாது, நுகர்ந்தால்தான் புரியும்.

மெய்வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல், பசி நோக்காமல், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாமல், அவமதிப்பும் கொள்ளாமல் காரியமே கண்ணுயிருந்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்ற ஒரு புலவரின் கருத்துக்கேற்ப, அத்தனை திண்மையான மனமும் களைப்பில்லாத உடலும், விளையாட்டின் மூலம் தான் பெறமுடியும். இது யூகம் அல்ல. வாழ்விலே கடக்கின்ற உண்மைகள் தான்.

பஞ்சு உடல் பாறை மனம்

"வலிய உடலில் தான் வலிய மனம் விளையும். உடலைப் பஞ்சு போலவும், உள்ளத்தைப் பாறை போலவும் வைத்திருக்கின்ற இக்கால தேகம், முக்காலத் திற்கும் துன்பத்தையே கொடுக்கும். உடல் பாறை போல் வலியதாக இருந்து உழைக்க வேண்டும். உள்ளமோ எல்லோருக்கும் இரங்கும் இனிய கோயிலாக விளங்க வேண்டும். மாறிப்போனல் வாழ்வும் மாறிப் போகும். இன்பமும் ஏமாற்றிப் போகும்.

இந்த உயர்ந்த வல்லமை இல்லாதவர்களை, இல் லாளும் வேண்டாள், ஈன்றெடுத்தத் தாய் வேண்டாள் செல்லாது அவர்கள் வாய்ச்சொல் என்று நாமே புதுப் பாட்டும் பாடலாம்.

பாயிலே கிடந்து, நோயிலே புலம்பி சுற்றத்தாரை யும் மற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி வாழ்கின்ற வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? இருக்கும் காலம்வரை இனிதாக உழைத்திருக்கும் தேகமும், இதமாய் சுகித்