பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 பரந்த அறிவும் பண்பட்ட அனுபவமும் இருந்தும், கன்ருக வாழ்கிற வழியும் புரிந்தும், நடுத்தர முதிய வயதிலேயே உடல்நலம் பழுது பட்டுப்போனால் அதனால் யாருக்கும் பயன் கிடைக்காதே! வீதிப் புழுதியிலே விழுந்த வெண்ணெய் போல, நோய் வாய்ப் பட்டுக் கிடக்கும் அறிஞர்களிடம் என்ன உதவிகள் கிடைத்து விடும்! அவராலேயே அவருக்கு உதவிக கொள்ள முடியாமல் போய் விடுகின்றதே!

எனவே, கவலையற்ற வாழ்க்கைக்கும் கோயனுகா நி2லமைக்கும், சுகம் தரும் கலமான மனதுக்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளும் தன்மைக்கும், இளைஞர்கள் எல்லாவகையான விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம். வயது முதிர்ந்தவர்கள் உடல் தளர்ந்த வர்கள் பூப்பந்தாட்டம், டென்னிஸ், மேசை பந்தாட்டம். கைப் பந்தாட்டம், வளையப் பந்தாட்டம் போன்ற மென்மைத் தன்மை வாய்ந்த விளையாட்டுக்களில் ஈடு படலாம்.

இதனால் பலரோடு சேர்ந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டு, கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு, உலக வாழ்க்கையை உளமார சுவைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்கின்ருேம் என்பதே உண்மை. விளையாட நேரமே இல்லையே என்று வாழ்வின் பிரச்சினைகளுக்குள்ளேயே வளையம் வந்தால், அதனால் வாழ்வுசுவை பெருது போய்விடும். உழைத்துக் களைத்த உடலில் மோதுகின்ற தென்றலையும், பசித்துத் தவித்த நாவளிக்கும் சுவையினையும், படுத்து உறங்கும்பொழுது மெய்மறந்து உறங்கி விழிக்கும் மேன்மையையும் விளையாட்டுக் களத்தில் இறங்கி விளையாடிக் களித்து உணர்ந்தவர்களுக்கே புரியும்.