பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49 இந் நலத் தரும் உண்மையை நம் காட்டவர் உணர்ந்து செயல்படத் தொடங்கினால் பாருக்குள்ளே நல்ல நாடு என்பது மட்டும் அல்ல, பெரும் வல்லமை யுள்ள நாடு என்றல்லவா உலகம் பாரதத்தைப் புகழும். புகழ் காக்க வாருங்கள் விளையாடி மகிழ்வோம்

விளையாடி மகிழ்வதால் உடல் மட்டுமா வலிமை பெறுகிறது? மூளையும்தான். மூளை வளமே வாழ்வின் வளம். அத்தகைய மூளை வளத்தை விளையாட்டு எவ்வாறு வளர்த்து விடுகிறது, என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

வி.விரு-4