பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ஒரு சாதாரண மனிதனின் மூளை எடையானது 48. அவுன்சிலிருந்து 49½; அவுன்சும், ஒரு பெண்ணின் மூளை எடையானது 43½; அவுன்சிலிருந்து 44,½ அவுன்சு வரையும் இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பாகும். சில நேரங்களில் ஒருவரது மூளையின் எடை 60 அவுன்சுவரை இருக்கும் என்றும் கணக்கிட் டிருக்கின்றனர். இதனை இன்னும் பல விஞ்ஞானிகளும் ஒருவரது எடையில் 1/48 பங்கு கொண்டதாக மூளையின் எடை அமைந்திருக்கும் என்றும் வகுத்துக் கூறி இருக் கின்றனர்.

உடல் அனைத்தும் செல்களால் ஆனது என்று முன்னரே குறிப்பிட்டிருந்தது போல, உடலை அமைக் கின்ற திசுக்களை ஆறு வகையாகவும் பிரித்திருக் கின்றார்கள் . ஜீரண உறுப்புக்கள், தோல் போன்ற வற்றுக்கு மேலுறை ஆகப் பயன்படும் காக்கும் திசுக்கள், தசைகளைக் கட்டுதல் மூட்டுகளுக்கு இடையே பொருத்திக் கட்டுதல் போன்ற பணியினைச் செய்யும் பொருத்தும் திசுக்கள். கட்டுமஸ்தான பகுதிகளாக உறுப் பினை அமைக்கும் தசைத் திசுக்கள், இரத்தத் திசுக்கள், கரம்புத் திசுக்கள், சுரப்பித் திசுக்கள் என்று ஆறுவகை யாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

இத்தகைய திசுக்களை உருவாக்கும் உயிரணு(செல்) ஒவ்வொன்றும் முக்கால் பங்கு நீராலும், கால் பங்கு உயிர்க் காற்று. நீர்க் காற்று, கந்தகம், பாஸ்பரம் போன்றவற்ருலும் ஆக்கப்பட்டிருருக்கிறது. அதனால் தான், உட லின் எடையான து முக்கால் பாகத் துக்கு மேல் நீரால் உண்டாகி இருக்கிறது என்கிருர்கள் .

உடலுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் உயிரணுக்களுக்கு என்றும் தேவை உயிர்க் காற்று