பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

61 தவறு செய்தால்தான் சரியானது எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். திருத்திக் கொள்ள முடியும் என்பது உளநூல் அறிஞர்களின் கருத்தாகும். அதனேயே ஒர் அறிஞர் கூறுகின்ருர், 'தவறு செய். கின்றவன் மனிதன். அதற்காக வருந்தித் திருந்திக் கொள்கின்றவன் ஞானி தன் தவறையே சரியென்று சாதிப்பதற்காக வற்புறுத்தி வாதாடி, வெற்றி காண முயல் பவன் சைத்தான் ஆவான் .” ஆகவே தவறுநேர்வதும், திருத்திக் கொள்வதும் போன்ற அனுபவங்களாலேயே, குழந்தை வளரும் பொழுது தெளிவடைந்தவர்களாக வளரக் கூடும். இத்தகைய அரிய முயற்சிகளுக்கு அருந்துணையாக விளங்குவது விளையாட்டுக்களாகும்.

ஆயகலைகளில் தூயகலை ஆயகலைகளனைத்துக்கும் துாயகலையாக, நேயகலை யாக விளங்குவது விளையாட்டுக்கள்தான், விளையாடும் பொழுது மட்டுமே மனிதன் மனிதனுக இருக்கிருறான் என்கிறார் ஒரு மேல் காட்டு அறிஞர். சொல்வதைச் செயலாக்குவது போல எண்ணுவதை எல்லாம் செயல் படுத்திக் காட்டும் பயிற்சி மேடையாகவிளையாட்டுக்கள் விளங்குவதால்தான் ஆதிகாலக்தொட்டே வினை யாட்டுக்கள் தொடங்கி, தொடர்ந்து வருகின்றன.

வெளிப்புறங்களில்தானே விளையாட வேண்டும்? வீட்டுக்குள்ளே என்ன விளையாட்டு வேண்டியிருக் கிறது? வேறு வேலையே இல்லையா! என்று. வேகத்துடன் வி லைஎழுப்புபவர்களும் உண்டு.