பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


உயர்ந்த கம்பங்களிலே நிற்கின்ற குறுக்குக் குச்சியை, ஒருவர் கீழே தள்ளிவிடாமல் மேலே கடந்தால்தான் தாண்டும் முறையில் வெற்றி பெற்றவராவர்.

கோலுடன் தாண்டுவதற்காக வேகமாக ஓடிவந்து, கோலூன்றித் தாண்டும் போட்டியில் கோலை ஊன்றித் தரையில் உதைத்து, தாண்ட முயற்சிசெய்து கால்களை உயர்த்தி எழுப்பிவிட்டு, அதற்குப்பிறகு கால்களைத் தரையில் ஊன்றி, தாண்டாமல் நின்று விட்டால், அவர் ஒரு முறை தாண்டுவதற்குரிய தனது வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டார் என்றே குறிக்கப்பட வேண்டும்.

தரையோடு சம அளவாக இருப்பது போல் பதிக்கப் பெற்றுள்ள மரத்தாலான அல்லது உலோ கத்தாலான பெட்டியில் ஊன்றியே, தாண்டுதல் வேண்டும்.

தாண்டும்போது குறுக்குக் குச்சியைத் தட்டிக் கீழே விழச் செய்தவரும்; தாண்டுதற்காகத் தரையை விட்டு குதித்தெழும்பிய பிறகு, குறுக்குக் குச்சியைக் கடக்காமல் கீழே குதித்து விட்டவரும்;

பெட்டியில் கோலினை ஊன்றி, கோலின் உந்துதலினால் மேலே சென்ற பிறகு, கை அளவுக்குக் கீழே பிடித்து இருக்கும் ஒரு கையை மேலே இருக்கும், கையுடன் கொண்டு சென்று சேர்த்துக் கொள்ளலாம்.