பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா


ஆனால் மேற்புறம் இருக்கும் மேல்கைக்கு மேலே கீழே பிடித்திருக்கும் கைப் பிடியிலிருந்து கையை உயர்த்திக் கொண்டு சென்று, மேலே உள்ள கைக்கு உயரமாகப் பிடித்துக்கொண்டு தாண்டுபவரும், அல்லது மேலே பிடித்திருக்கும் கையை இன்னும் மேலே நகர்த்திக்கொண்டு சென்று தாண்ட முயற்சி செய்பவரும்;

(ஒரு முறை மேலும் கீழும் என்ற முறையில் கோலினைக் கைகளால் பற்றிக்கொண்டால், மேலே பிடித்தக் கையைத் தாண்டி முடிக்கும்வரை மாற்றவே கூடாது. அடிப்பாகத்திலிருந்து வரும் கீழ்க்கை மேல்கை வரையிலும் வரலாம். ஆனால் மேற்கையைத் தாண்டிப் போகக்கூடாது. அவ்வாறு போனால், அந்த உடலாளர் கோலின்மேல் பற்றிக்கொண்டு ஏறுவது போல தாண்டும் முயற்சியைச்செய்து அதிக உயரம் தாண்டக் கூடிய சர்க்கஸ்காரர் நிலையைப் போலாகிவிடும்.)

தாண்டுவதற்கு முன்னதாகவே, தன்னுடைய உடலாலாவது அல்லது தான் உபயோகிக்கும் கோலினாலாவது அல்லது தாண்டியுள்ள பரப்பையாவது அல்லது தாண்டிக் குதிக்கின்ற பரப்பை யாவது தொட்டுவிடுபவரும்;

மேற்கூறியன எல்லாம், தவறாகி ஒர் உடலாளர் தனக்குரிய ஒர் தாண்டும் வாய்ப்பை இழந்தார் என்பதற்குரிய காரணங்களாகும்.