பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104 விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

கோலிலே, கைப்பிடியின் இறுக்கத்திற்காகவும், பிடிப்புக்காகவும் (Grip) கட்டு போடப்பட்டிருக்கும். அதைத் தவிர வேறெந்தவிதமான தாண்டுவதற்கு உதவும் எந்த ஆதரவான அமைப்பும் அந்தக் கோலிலே இருக்கக்கூடாது.

தாண்டிக் கொண்டிருக்கும் பொழுதே, தாண்ட உதவும் கோல் திடீரென்று முறிந்துவிட்டால், அதனால் அவரது தாண்டும் ஒர் வாய்ப்பு முடிந்து போகாது. மீண்டும் அவருக்கு அதே தாண்டும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

உடலாளர், தான் குறுக்குக் குச்சியைத் தாண்டி மறுபுறம் குதித்த பிறகு, அவருக்காகத் தாண்ட உதவிய கோலானது, குறுக்குக் குச்சியின் பக்கமாகச் சாய்ந்து தட்டிவிட்டால், அதற்கு அவரே பொறுப்பாவார். தாண்டவில்லை என்றே அவர் பெயருக்கு முன்னால் குறிக்க வேண்டும்.

அவ்வாறு குறுக்குக் குச்சியின்மீது மோதுவது போல் கோல் சாயும்பொழுது, அதை யாரும் தடுக்கவோ மோதாதவாறு பிடிக்கவோ கூடாது. அதையும் மீறி யாராவது அதைத் தடுத்தாலும், பிடித்தாலும், அவர் அந்தத் தாண்டும் வாய்ப்பை இழந்ததாகவே கொள்ள வேண்டும்.

உடலாளர்கள் அனைவரும் அவர்களுக்குரிய தாண்ட உதவும் கோலையே பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்குரிய கோலை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துதல் கூடாது. அனுமதி பெற்றுக்