பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா
[] 111

இருவரும் ஒரே அளவுள்ள தூரமாக இருந்தால் அவர்கள் அதற்கு முன் தாண்டிய முயற்சியில் எவ்வளவு துரம் தாண்டியிருக்கின்றனர் என்பதைக் கண்டு பிடித்து, அதில் யார் அதிகம் தாண்டியிருக்கின்றாரோ (Next Best) அவரே வெற்றி பெறும் தகுதியை அடை கின்றார்.

அதிலும் இருவரும் சமமாக இருந்தால், அதற்க்கடுத்த வாய்ப்பைப் பார்த்து, அதில் யார் அதிகம் தாண்டியிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

அதற்காகத்தான், ஒவ்வொரு முறையும் உட லாளர்கள் தாண்டும்போது அளக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, சிக்கல் வரும் என்று நடுவர்கள் எப்பொழுதும், அதற்கு முன்னே ஆயத்த மாக இருந்து, விதிகளைப் பின்பற்றிப் பணியாற்றவேண்டும்.

5. குண்டு எறிதல்(Putting the Shot)

7 அடி விட்டமுள்ள வட்டத்திற்குள்ளேயிருந்து தான் இரும்புக் குண்டை எறிய வேண்டும். எறியப் பயன்படும் கையின் தோளிலிருந்து தொடங்கி, ஒரு கையால் தான் குண்டை எறிய வேண்டும்.

தோளுக்குப் பின்புறம் இரும்புக் குண்டுடன் கை போகக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தி எறிதல் தவறான எறியாகும்.

எறியும்போது, எறிபவரின் கால் முன் பக்கமுள்ள 'தடைப்பலகையைத்' தொடலாம். ஆனால் அதன்