மேற்பரப்பை மிதிக்கவோ தாண்டவோ, கடக்கவோ கூடாது.
தடைப் பலகை (Stop Board) இல்லாமல், கண்ணாம்பினால் கோடு போட்டிருந்தால், அந்தக் கோட்டைத் தொடவோ மிதிக்கவோ, அந்தக் கோட்டைக் கடந்து காலை மறுபுறமுள்ள தரையில் தொடவோ வட்டத்தைத் தொட்டுவிடவோ கூடாது.
எறிந்த பிறகு உடனே ஒடி விடாமல், (ஒடினால் தவறாகும்) பின்புறமுள்ள வட்டப் பகுதியின் வழி யாகவே, (குண்டு தரையைத் தொட்டதும்) நிதான மாகத் தான் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு முறை ஒவ்வொருவரும் எறிந்த பிறகு (சரியான எறியை மட்டும்) அதைக் கட்டாயம் அளக்க வேண்டும்.
எறியப்பட்ட குண்டு விழுந்த இடத்திற்கும் வட்டத்தின் உள் அளவுப் பகுதிக்கும் (inner edge) இடைப்பட்டதூரமே அளக்க இருக்கின்ற தூரமாகும்.
6. இரும்புக் குண்டு வீசி எறிதல் (Hammer Throwing)
7 அடி விட்டமுள்ள வட்டத்திற்குள்ளிருந்து, 16 பவுண்டு எடையுள்ள, கம்பி கோர்க்கப் பெற் றிருக்கும். இரும்புக் குண்டைப் பலமுறை சுற்றி வீசி எறியும் போட்டியே இரும்புக் குண்டு வீசி எறிதலாகும்.
வட்டத்திற்குள்ளிருந்து இரு கோடுகள் 45 அளவுடன் பிரிந்து போகின்ற பரப்பிற்குள் விழுகின்ற ‘எறி தான் சரியானதென்று கொள்ள வேண்டும்.