பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


எந்தப் பள்ளி விழா நடத்துகிறதோ அந்தப் பள்ளியின் பெயரை, அல்லது நிறுவனத்தின் பெயரை முதலில் கூறிக்கொள்ள வேண்டும்.

"......... பள்ளி விளையாட்டுக்களின் பண்பு நிறைப் போட்டிகளில் பங்கு பெறுகின்ற நாங்கள், நடைமுறை விதிகளை மனமார ஏற்று மதித்து, நிறைந்த விருப்போடும் நிலையான உணர்வோடும், பெருந்தன்மையுள்ள உடலாளர்களாக நடந்துகொண்டு, பள்ளியின் பெருமையும், விளையாட்டுக்களின் புகழும் வீறுபெற்று ஓங்கப் போட்டியிடுவோம் என்று உறுதி கூறுகிறோம்.”

என உறுதிமொழியை உரத்தக் குரலில் வாசிப்பார். அணி வகுத்து நிற்கும் உடலாளர் அனைவரும் தலையை அசைத்து, மௌனமாக ஆமோதிப்பார்கள். அதற்குப் பிறகு, விழாவைத் துவக்கி வைத்தவர், மேடையிலிருந்து இறங்கித் தமது இருப்பிடத்துக்குச் செல்ல, அணிவகுத்து நின்ற உடலாளர்கள் அனைவரும் அமைதியாக அணிவகுப்புடனேயே தங்களுக்குரிய இடங்களுக்கு வீர நடையிட்டுச் செல்வார்கள்.

எல்லோரும் அமைதியாக அவரவர்களது இருப்பிடத்திற்குச் சென்ற உடனேயே, அறிவிப்பாளர்,