பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

ஆகவே, உடலாண்மைப் போட்டி நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து, நிகழ்ச்சி நிரலை அமைக்கும் போது மிகவும் கவனத்துடனும் அனுபவமுள்ளவர்களைக் கலந்து பெற்ற அறிவுரையுடனும் செயலாற்ற வேண்டும்.

தாங்கள் குறிப்பிட்டுத் தொகுத்திடும் நிகழ்ச்சி நிரல் அனைத்தும், தாங்கள் குறிக்கின்ற நேரத்தில் நடக்குமா, அதற்குரிய நேரம் போதுமா என்பதை முதலில் இக்குழு சிந்திக்க வேண்டும்.

ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உடலாளர்களுக்குத் தேவையான ஒய்வு நேரத்தைத் தருகின்ற தன்மையிலும் நிகழ்ச்சியை வரிசைப்படுத்த வேண்டும்.

நிகழ்ச்சிகளை அதிக அளவில் சேர்த்து, நீண்ட நேரம் நடப்பதுபோல் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தால், பங்கேற்கின்ற உடலாளர்களும் களைத்துப் போவார்கள். நடத்துகின்ற அதிகாரிகளும் அசந்து போய் விடுவார்கள். பொதுமக்களும் எரிச்சல் பட்டுக்கொண்டு எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, அரை நாள் (அதாவது காலை அல்லது மாலை) நிகழ்ச்சியாக இருந்தால் 2% மணி அல்லது 3 மணி நேர அளவுக்குள் போட்டிகளைத் தொடங்கி, முடிந்து போகக்கூடிய தன்மையில் அமைப்பதுதான் எல்லாருக்குமே நல்லது.

போட்டி நடத்துவதற்கேற்ற நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்தால், அதற்காகக் குறைந்த நேரத்திற்