உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [j 49 குள் எப்படி நடத்த முடியும்? என்று தயங்கவோ மயங்கவோ வேண்டியதில்லை . ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகளில் தொடர்ந் தாற்போல் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் நடத்தினால் நிகழ்ச்சிகளை விரைவில் நடத்த முடியும். அதற்கு அந்தந்த நிகழ்ச்சிகளை நடத்தித் தரும் அதிகாரிகளின் எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகம் பேர் இருந்தால் மேலே கூறிய நிகழ்ச்சிகளை எளிதாக நடத்திவிடலாம்.

ஆனால், அதே சமயத்தில், இரண்டு நிகழ்ச்சி களை ஆங்காங்கே நடத்தும்போது, அவைகளுக் குரிய இறுதிப் போட்டியை (Finals) ஒரே சமயத்தில் நடத்தி விட்டால், பார்வையாளர்களுக்கும், மற்றவர் களுக்கும் போட்டியைக் காணாத ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படும். ஆகவே, ரசிகப் பெருமக்களுக்கு அந்தக் குறை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லதாகும்.

போட்டி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, தேநீருக்கென்றும், சிற்றுண்டிக்கென்றும் ஏதாவது ஒரு காரணம் கூறி இடைவேளை விடுவது அவ்வளவு நல்லதல்ல. நிகழ்ச்சிகளைத் தொடங்கி விட்டால், நிறுத்தாமல் மளமளவென்று நடத்திச் செல்வதுதான், விழாவினுடைய வெற்றி ரகசிய மாகும்.

மேற்கூறிய கருத்துக்களை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தப்