பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 D விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

பிறகு, அந்த நிகழ்ச்சிக் குறிப்பில், அதிகாரிகளின் பெயர்களும், அவர்களுக்குரிய கடமையாற்றும் பகுதியும்; உடலாளர்களின் பெயர்களும், அவர்களுக்குரிய 'எண்' களும் (Numbers); அவர்களது 'ஒட்ட வரிசை முறையும், இதற்கு முன்னர் நடைபெற்றப் போட்டியில் ஏற்பட்ட வெற்றிச் சாதனைகளையும் தொகுத்து, நடைபெறுகின்ற போட்டியில் வெற்றிச் சாதனைகளைக் குறித்துக் கொள்ளும்படியான இடத்யுைம் ஒதுக்கி வைத்து, அழகாக அச்சிட்டு, உரியவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.

நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய பதிவுத் தாள்களையும், முடிந்தால் அந்தக் குறிப்பேடுகளில் (Score Sheet), பங்குபெறும் உடலாளர்களின் பெயர்களையும் அச்சிடலாம். இல்லையென்றால், கையெழுத்தாக எழுதித் தயாராக வைத்திருக்கலாம் . இவ்வாறு போட்டிக்கு முன்னரே இத்தனைக் காரியங்களையும் பொருத்தமாகவும், திருத்தமாகவும் செய்து வைத்திருந்தால், குழப்பமே வராமல் காரியங்கள் இனிமையாக நடந்தேறும்.

முடியுமானால், போட்டிக்கான முக்கியமான விதிகளையும் மற்றும் வேண்டிய விளக்கச் செய்திகளையும் அச்சிட்டுத் தருதல் இனிதாகும்.