பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

[] 83


பந்தய நேரத்தில், மற்றொரு போட்டியாளரைத் தள்ளுவதும், இடிப்பதும், குறுக்கே ஒடுவதும், கிறுக்குத் தனமாகத் தடை செய்வதும் மற்றவரின் முன்னேற்றத்தைத் தடுப்பதும் கடுமையான குற்ற மாகும். போட்டியிலிருந்து விலக்கப்படுவதே அதற் குரிய சரியான தண்டனையாகும்.

ஒட்டப் பந்தயத்தில் இவ்வாறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், தவறு செய்பவரை விலக்கவும், விலக்கப்பட்டவரை வெளியேற்றிவிட்டு,மீதியுள்ளவர்களை வைத்து, மறுமுறையும் அந்தப் போட்டிக்குரிய நிகழ்ச்சியை நடத்தி வைக்கவும், அதுவே முதல் கட்டப் போட்டியாக (Heat) இருந்தால், தொடர்ந்து வருகிற அடுத்தக் கட்டப் போட்டிகளில் (Heats) பங்கு பெறச் செய்து, பாதிக்கப்பட்டவருக்கு உரிய வாய்ப்பை வழங்கவும் நடுவருக்குப் பூரண அதிகாரமுண்டு.

தாண்டும் அல்லது எறியும் போட்டிகளில் பங்கு பெறும் ஒரு உடலாளர், இது போன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நடுவர் வழங்கலாம்.

ஒட்டப் பந்தயத்தில் பங்கு பெறும் உடலாளர் தங்களுக்கெனத் தரப்பட்டிருக்கும் ஒடும் பாதையில்’ (Lane) தான், எந்தப் போட்டியாயினும், தொடக்கத்தி லிருந்து முடிவு வரை ஒட வேண்டும்.

அவர்கள் தங்களுக்குரிய பாதையில் ஓடாமல், பாதை மாறியோ அல்லது பாதைக்கு வெளியேயோ