பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


குறிப்பிடப்பட்ட போட்டியிலிருந்தே விலக்கப்படு வார்கள்.

கோலுான்றித் தாண்டல், குண்டெறிதல், தட்டெறிதல், வேலெறிதல் போன்ற நிகழ்ச்சிகளில், கைகளுக்கு சரியான பிடிப்பு’ (Grip) ஏற்படப் பயன்படும் பொருள்களை, கைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், எல்லாப் போட்டியாளர்களும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடலாளர்கள் தங்களுடைய உடலிலுள்ள தசைகள், நரம்புகள் மற்றும் உறுப்புக்கள் அனைத்தும், விளையாட்டுத் திறனை மிகுதியாகப் பெறுவதைத் துண்டுவதற்காகவும், களைப்புணர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்காகவும் போதை பொருட்களைப் பயன் படுத்திக் கொண்டு போட்டிக்கு வரக்கூடாது.

அவ்வாறு பயன்படுத்துவது, உண்மையிலே உடலுக்குக் கெடுதி பயக்கும் என்பதோடு மட்டுமல்ல, அது நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பான செயலாம்.

பொழுதுபோக்குப்போட்டியாளர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்திருப் பதைப் போட்டி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே போட்டியிலிருந் நீக்கப்படுவார்கள்.

எங்கெங்கு அகில உலகக் கழகத்தின் விதிகள் பின்பற்றப்படுகின்றனவோ, அங்கெல்லாம் போட்டி யாளருக்குப் போதைப் பொருட்களைத் தந்து