பக்கம்:விளையும் பயிர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை ரவி

உங்களுக்கு ஞாபகசக்தி இருக்கிறதோ? அப்படியானால் நான் ஒரு பாட்டைச் சொல்கிறேன்; அதை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா? நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்.

'ஜன கண மன அதி நாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா' ஹோ, ஹோ, ஹோ - நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். ரேடியோவிலே கேட்டது உங்களுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. சினிமாவிலே கேட்டதும் நினைவுக்கு வருகிறது. இன்னும் எங் கெங்கோ கேட்டிருக்கிறீர்கள்.

இந்தப் பாட்டுச் சுதந்தரக் குடியரசாகிய நம்முடைய பாரத நாட்டின் கீதம்; தேசிய கீதம்'என்று சொல்லுவார்கள். இதைப் பாடினவர் ரவீந்திரநாத டாகுர் என்பவர். அவர் இப் போது இல்லை. நீண்ட தாடியோடு இருக்கும் அவர் படத்தை நீங்கள் எந்தப் புத்தகத்திலாவது பார்த்திருக்கலாம். அவர் பெரிய கவிஞர். அழகாகக் கவி பாடுவார். மேல்நாட்டுக்காரர்கள் அவர் பாட்டை மெச்சி நோபல் பரிசு என்ற பெரிய பரிசை வழங்கினார்கள். நீண்ட தாடிக்காரராகிய அவர் பிறக்கும்போதே, தாடிக்கார ராகிவிட்டாரா என்ன? இல்லை, இல்லை. அவரும் உங்களைப் போலக் குழந்தையாக இருந்தார். மாணாக்கனாக இருந்தார். அப் போதெல்லாம் அவர் மிகவும் சாது. பள்ளிக்கூடத்துக்குப் போகிறதென்றாலே அவருக்கு வேப்பங்காயாக இருக்கும்.

பெரிய பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவர் ரவீந்திரர், கல்கத்தாவில் அவர்களுக்குப் பிரம்மாண்டமான வீடு இருந்தது. அவருக்குப்பல தமையன்மார் வீடு முழுவதும் சொந்தக்காரர்களும் வேலைக்காரர்களும் நிறைய இருப்பார்கள். எப்போதும் ஜேஜே என்று இருக்கும் வீடு.

குழந்தை ரவிக்குக் கூட்டத்திலே இருப்பதென்றால் பிடிப்ப தில்லை. தனியாகப் போய் உட்கார்ந்துகொள்ளுவார். என்ன என்னவோ யோசித்துக்கொண்டே இருப்பார். அவர்கள் வீட்டில் பழங்காலத்துப் பல்லக்கு ஒன்று இருந்தது. முன்பு அதன்மேல்

25