பக்கம்:விளையும் பயிர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


பெரிய மனிதர்கள் ஏறிப் போவார்கள். ஹாம் ஹாம் என்று சொல்லிக்கொண்டே வேலைக்காரர்கள் அதைத் தூக்கிக்கொண்டு போவார்கள். இப்போதோ அதன்மேல் யாரும் ஏறுவதே இல்லை. நல்ல நல்ல வண்டிகளெல்லாம் வந்துவிட்ட பிறகு பழைய பல்லக்கை யார் உபயோகிப்பார்கள்? அதில் யாராவது ஏறிச் சென்றாலும் ஜனங்கள் பார்த்துச் சிரிப்பார்கள்.

பழைய பல்லக்கை ஒரு மூலையிலே வைத்திருந்தார்கள். குழந்தை ரவி அதைக் கண்டார். அதன்மேல் அவருக்குப் பிரியம் உண்டாயிற்று. யாரும் தொந்தரவு பண்ணாமல் சுகமாக உட்காரலாம் என்று எண்ணினர்.

பல்லக்கிலே போய் உட்கார்ந்தார். அவருக்குக் கரைகாணா ஆனந்தம் உண்டாயிற்று. பல்லக்கைத் தூக்க ஆள் இல்லை. அதில் அவர் ஏறிப் பிரயாணம் செய்ய முடியாது. ஆனாலும் அவருக்கு அதிக ஆனந்தம் உண்டாயிற்று. ஏன் தெரியுமா? அவர் அதைப் பல்லக்காகவே நினைக்கவில்லை, ஒரு பெரிய சமுத்திரம். அதன் நடுவிலே ஒரு சிறிய தீவு. அங்கே ஒரு வீரன் காவலிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்டான். யாருடைய தொந்தரவும் இல்லாமல் அந்தத் தீவிலே தனிக்காட்டு ராஜாவாக வாழ்கிறான். ரவி அந்த வீரராக ஆகிவிடுகிறார், பல்லக்கே தீவாகிவிடும்

திடீரென்று அந்தத் தீவு மாறிவிடும். பல்லக்குத் தானாகவே பறக்க ஆரம்பித்துவிடும். நிஜமாக அல்ல. எல்லாம் மனசிலே நினைத்துக்கொள்கிறதுதான். பல்லக்குப் போய்க்கொண்டே இருக்கும். கவி பல தேசங்களைக் கடந்து போவார். அவர் பாட புத்தகத்தில் என்ன என்னவோ தேசங்களைப்பற்றியெல்லாம் வாசித்திருந்தார். அந்தத் தேசங்களைப் பார்த்துக்கொண்டே அவர் பிரயாணம் செய்வார். அப்புறம் காடு வரும். காட்டிலே புலி வரும். குழந்தை ரவி சிறிது நடுங்குவார்.

இப்படியெல்லாம் மனசிலே கற்பனை செய்துகொள்வார் ரவி. பொழுதுபோனதே தெரியாமல் அந்தப் பழைய பல்லக்கில் அவர் மனம்போனபடி யெல்லாம் பாவனை செய்வார்.

ரவியினிடம் ஒரு மரச் சிங்கம் இருந்தது. மரத்தினால் ஆன ஒரு கத்தியும் வைத்திருந்தார். நவராத்திரி வந்தது. சிங்கத்தைப் பலி கொடுத்தால் அற்புதமான சக்தி கிடைக்கும் என்று யாரோ


26