பக்கம்:விளையும் பயிர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார்

பாட்டு வந்துவிட்டது. 'பாரதி சின்னப்பயல்’ என்ற ஈற்றடியை வைத்து ஒரு வெண்பாவைப் பாடிவிட்டார் பாரதியார்.

“. . . . . . .... காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்’ என்பது பாட்டின் முடிவு: இதைக் கேட்டுப் பக்கத்தில் இருந்த வர்களெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். பிள்ளையவர்கள், பாரதியைச் சின்னப்பயல் என்று சொன்னார். பாரதியாரோ 'பிள்ளைவாளேயே சின்னப்பயலாக்கிவிட்டார். காந்திமதி நாத னைப் பார், அதி சின்னப் பயல்’ என்று பிரித்து அர்த்தம் செய்யும் படி பாடினார். பிள்ளைவாள்' பாரதியாரைச் சின்னப் பயல் என்று மாத்திரம் சொன்னார். அந்த இளங்கவியோ அப்படிச் சொன்னவரை அதி சின்னப்பயல், மிகவும் சின்னப் பயல் ஆக்கி விட்டார். சிறுபிள்ளை அழகாகப் பாடுவதைக் கேட்டுச் சந்தோஷப் படாமல் பொறாமைப்பட்ட அந்த மனிதர் சின்னப் புத்தி படைத்த வர். அவரைப் பெரிய மனிதர் என்று எப்படிச் சொல்லலாம்? 'அதி சின்னப்பயல்’ என்று பாரதியார் சொன்னது சரி. இந்தச் சமாசாரம் ஊர் முழுவதும் பரவிவிட்டது. பாரதி யாரின் புகழ் பின்னும் உயர்ந்துவிட்டது. ஒரு நாள் தமிழ் வகுப் பில் பாடம் நடந்துகொண் டிருந்தது. தமிழ் வாத்தியார் பாரதி யாரை ஏதோ ஒரு கேள்வி கேட்டார். பாரதியார் தக்க விடை சொல்லவில்லை. சும்மா இருந்தார். என்னப்பா, உன்னைப் பற்றி ஊரிலெல்லாம் பிரமாதமாகச் சொல்கிறார்கள். காளமேகம் போல் கவியைப் பொழிவதாகப் பாராட்டுகிறார்கள். அந்தக் காளமேகம் இப்போது ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கிறதே!” என்று கிண்டலாகக் கேட்டார் வாத்தியார். பாடத்தில் கேட்ட கேள்விக் குப் பாரதியார் பதில் சொல்லவில்லை. ஆனால் கிண்டலாக வாத்தி யார் கேட்ட இந்தக் கேள்விக்குப் பதில் உடனே வந்துவிட்டது. "வாத்தியார் நினைக்கிற போதெல்லாம் மேகம் மழை பொழியுமா? மேகம் ஒருவருக்கு அடங்கி அவர் விருப்பப்படி மழை பொழிவதில்லையே! இந்த விஷயம் ஐயாவுக்குத் தெரியாதா?” என்றார் பாரதியார். பையன்கள் எல்லாம் சிரித்தார்கள்.

பாரதியாருக்கு ஓர் அத்தை இருந்தாள். அவளுடைய கணவர் காசியில் வேலையாக இருந்தார். பாரதியார் அங்கே போய்ச் சில வருஷங்கள் படித்தார். வடமொழி, ஹிந்தி ஆகிய பாஷைகளில் அவர் அறிவு பெற்றார். மறுபடி 1901-ஆம் வருஷம் எட்டையபுரம்

- 39