பக்கம்:விளையும் பயிர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

அம்மாவோ சூரியனைக் கண்டாஒழிய சாப்பிடுவதில்லை. காந்தி அம்மாவிடம் "சாப்பிடாமல் இருக்கிறாயே ;அம்மா! இன்னும் சூரியன் முகத்தைக் காட்டவில்லையே" என்று வருத்தத்தோடு சொல்வார். "கடவுளுக்கு நான் உணவு உட்கொள்ளவேண்டுமென்று திருவுள்ளம் இருந்தால் சூரிய தரிசனம் கிடைக்கும். அது கிடைக் காதவரையில், நான் சாப்பிடாமல் இருப்பதே கடவுளுடைய சித்தம் என்றுதான் நினைப்பேன்" என்பாள். என்ன பக்தி பார்த்தீர்களா? தம்முடைய தாய் பட்டினி நீங்கிச், சாப்பிட வேண்டும் என்று காந்திக்கு ஆவலாக இருக்கும். அடிக்கடி வானத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார். சூரியன் தோன்றினால் ஓட்ட ஒட்டமாக அம்மாவிடம் ஒடி, "அம்மா, அம்மா, அதோ சூரியன் பார் பார்த்துவிட்டுச் சாப்பிடு "கூறுவார்.

காந்தியின் தகப்பார் ராஜகோட் என்ற ஊருக்கு உத்தியோகமாகப் போனார். காந்தியும் அங்கே சென்றார். அங்கே ஒரு சின்னப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். அவருக்கு விஷமம் பண்ணவே தெரியாது.மற்றப் பையன்களோடு கூடிக் குதித்து விளையாடுவதுமில்லை.வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போவார். அங்கே பாடம் உண்டு அவர் உண்டு. பிறகு பள்ளிக்கூடம் விட்டால் ஒரே ஒட்டத்தில் வீடு வந்து சேர்வார். சில காலங் கழித்துச் சின்னப் பள்ளிக்கூடத்தை விட்டுப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் துரை வந்தார். அப்போதுகாந்தி ஆறாவது வகுப்பில் வாசித்துக்கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் துரை அந்த வகுப்புக்கு வந்து இங்கிலீஷில் பரீட்சை செய்ய ஆரம்பித்தார். காந்தி இங்கிலீஷில், சுமார்தான். இன்ஸ்பெக்டர் ஐந்து இங்கிலிஷ் வார்த்தைகளைச் சொல்லி அவற்றை எழுதச் சொன்னர் வாத்தியாரும் அங்கே இருந்தார். காந்தி ஒரு வார்த்தையைத் தப்பாக எழுதினார்.

வாத்தியார் கவனித்தார். அவரை எப்படித் திருத்துவது? பக்கத்திலிருந்த பையன் சரியாக எழுதியிருந்தான். வாத்தியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. தம் கால் பூட்ஸால் காந்தியின் காலை அழுத்தினார் கண்களால் பக்கத்துப் பையனைக் கவனிக்கும்படி ஜாடை காட்டினார் . காந்தி அவர் ஜாடையைப் புரிந்துகொள்ளவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விளையும்_பயிர்.pdf/7&oldid=1412017" இலிருந்து மீள்விக்கப்பட்டது