பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விளையும்பயிர் முளையிலே தெரியும் நெம்புகோல் தத்துவம் அடுத்த கண்டு பிடிப்பு நெம்புகோல் தத்துவமாகும். நெம்புகோலின் உதவியால், மிகுந்த கனமுள்ள ஒரு பொருளைக் குறைந்த ஆற்றலைக் கொண்டு தூக்கி விடலாம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில், படைக் கலங்களை எதிரியின்மேல் எறியும் கருவிகளைப் படைத்துத் தம் மன்னனுக்குப் போரில் வெற்றி கிடைக்கச் செய்தார் ஆர்க்கிமிடீஸ். - கி.மு. 215-ஆம் ஆண்டு நடந்த போரில், ஆர்க்கிமிடீஸ் கண்டு பிடித்த எறிபடைக் கருவிகளைக் கொண்டு பகைவரின் படைகளைக் கண்டபடி விரட்டித் தோல்வியைத் தழுவச் செய்து சைரக்யூஸ் என்னும் ஊர் காப்பாற்றப்பட்டது. இந்தப் பொறுப்பை ஆர்க்கிமிடீசே ஏற்றுக்கொண்டு வெற்றி தேடித் தந்தார். ஆர்க்கிமிடீஸ் திருகு மற்றும் ஒன்று ஓர் உருளைக்குள் ஒரு நீண்ட திருகைச் சுழலச் செய்து, உருளையின் அடியில் உள்ள ஒரு பொருளை மேலே வரச் செய்யலாம் என்று செய்து காட்டினார். இதற்கு ஆர்க்கிமிடீஸ் திருகு' என்று பெயராம். இந்தக் கண்டுபிடிப்பின் உதவி கொண்டே நீர் இறைக்கும் கருவி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மற்றும் இவர், உருளை, சுருள், கோளம், வட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து பல கணிதக்கலை நுணுக் கங்களை வெளியிட்டார்.