பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மின்சாரம் கண்ட மேதை அறிமுகம் இரவில் விளக்கெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்த மனிதன், இப்போது மிக்க பேரொளியில் வாழ்கிறான். புழுக்கத்தால் இரவில் தூக்கம் வராமல் கொசுக்கடியின் இடையே துன்பப்பட்ட மனிதன் இப்போது மின் விசிறியின் கீழே இன்பமாகப் படுத்து உறங்குகிறான். எவ்வளவோ வேலைகளை - எத்தனையோ விதமான வேலைகளை அல்லும் பகலும் அயராது உழைத்துச் செய்து ஓய்ந்துபோன மனிதன், இன்று எந்திரப் பொறி களால் செய்வித்து உள்ளம் மகிழ்கிறான். இந்த வேலை களை மின்சாரம் செய்கிறது. மிகச் சிறிய வேலை முதல் மிகப் பெரிய வேலை வரை மின்சாரத்தால் நடைபெறுகின்றன. ஒருமணி நேரம் மின்சாரம் இல்லையேல், மின்சாரம் எப்போது வரும் - இன்னும் எவ்வளவு நேரமாகும் - என்று கேட்டுத் தொலைபேசி மேல் தொலைபேசித் தொடர்பு கொண்டு அல்லல் உறுகிறான் மனிதன். மின்சாரம் இல்லையேல் வாழ்வு இல்லை என்ற அளவுக்கு இன்று மக்கள் நாகரிகம் வளர்ந்துவிட்டது. ஆம் - பிணிபோக்கி உயிர் காக்கும் மருத்துவத்துறைக்கும் மின்சாரம் இன்றியமையாததாக ஆய்விட்டது.