பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விளையும் பயிர் முளையிலே தெரியும் காட்டு மனிதர்கள் நகர வாழ்க்கையை மேற் கொண்டதும் சூழ்நிலையால் பெரிய மாறுதல் அடை வதையும் டார்வின் அறிந்து வைத்தார். இவர்களின் கப்பல் கலாப்பசோஸ் என்னும் தீவை அடைந்தபோது, அந்தத் தீவையே ஓர் ஆராய்ச்சிக் கூடமாகக் கொண்டு ஆங்கிருந்த உயிரினங்களை ஆழ ஆய்ந்தார். எல்லா உயிர்களும் ஒரே காலத்தில் படைக்கப் பட்டிருந்தால் உயிர்கட்குள் இத்தனை வகைகள் இருப்பது ஏன்? ஒரே இன உயிர்களுள்ளும் பல வகைகள் இருப்பது ஏன்?-என்றெல்லாம் இவரது உள்ளம் கிளர்ந்தெழுந்தது. தோற்றம் டார்வின் தமது ஆராய்ச்சியின் பயனாக உயிர் இனங்களின் தோற்றம் (origin of Species) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். ஆல் பிரடு ரசல் வாலஸ்’ (Alfred Russel Wallace) Stéârg)|th 9/565i os & Gloss எழுதி டார்வினுக்கு அனுப்பியிருந்தார். டார்வின் கருத்தோடு இது ஒத்திருந்தது. ஆனால், வாலஸ் தமது கருத்தைப் பார்த்தே டார்வின் எழுதினார் என்று கூற வில்லை; டார்வினின் சொந்தக் கண்டுபிடிப்பே அது என்று உலகுக்குக் கூறினார். என்னைப் பார்த்து நீ எழுதினாய் என்று கூறி ஒருவர்க்கொருவர் போட்டி போட்டுப் போரிட்டுக்கொள்ளும் மனப்பான்மை வாலசுக்கு இல்லை. இருவர் இயற்கையாக எழுதுவது தற்செயலாய் ஒத்திருப்பது நடக்கக்கூடியதே.