பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விளையும் பயிர் முளையிலே தெரியும் தம் காலத்தில் ஆயிரக் கணக்கான விலங்குகள் இறந்து விட்டதைக் கண்ட பாஸ்டர், இறக்கச் செய்யும் நுண்ணுயிர்களைக் கொண்டு அம்மைப்பால் உண்டாக்கி அதனை ஊசி மூ ல ம் விலங்குகட்கு ஏற்றிக் காப்பாற்றினார். வெறி நாய்களைப் பீடிக்கும் ரேபிஸ் (Rabies) என்ற நோய்தான் கடிபட்டவர்க்கும் இறுதி உண்டாக்குகிறது. இந்த நோய் நச்சு நுண்ணுயிர்களால் உண்டாவது. இதைப் போக்கும் ஆய்விலும் பாஸ்டர் முனைப்புடன் ஈடுபட்டார். அந்த நோய் மக்களுக்கு வராதவாறு தடுக்கக்கூடிய அம்மைப்பாலையும் பாஸ்டர் உருவாக்கி வெற்றி கண்டார். 1885 ஆம் ஆண்டு சூலைத்திங்களில், பாஸ்டரின் தாய் வெறிநாய் கடித்துவிட்ட ஒன்பது வயதுச் சிறுவனை அழைத்து வந்து நலமாக்கக் கூறினார். பாஸ்டர் அரிதின் முயன்று அவனைக் காப்பாற்றினார். இவரது ஆய்வுகளைப் பாராட்டிப் பலர் தந்த பொருளால் பாஸ்டர் நிறுவனம் என்னும் பெயரால் 1888 ஆம் ஆண்டு ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் முற்பகுதியில், வெறி நாய்க் கடியோடு ஒரு சிறுவன் போராடிக் கொண்டிருக்கும் அமைப்பில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. முதலில் வெறிநாய்க்கடி நோயிலிருந்து காப்பாற்றப்பட்டவன் ஒரு சிறுவனே யாதலின், அதை அறிவிக்கும் நோக்குடன் இது அமைக்கப்பட்டிருக்கலாம்.