பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நோபெல் பரிசுக் குடும்பம் மைந்தரும் மாதரும் மேரிகியூரி "மைந்தர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ" என்று கம்பர் எந்தத் துறையின் அடிப்படையில் பாடி இருப்பினும், இந்த உண்மை எல்லாத் துறைகட்கும் பொருந்தும். இதைச் சுப்பிரமணிய பாரதியார் பெண்ணுரிமைப் பகுதியில் மிகவும் விரிவாகவும் விளக்க மாகவும் அழுத்தம் திருத்தம் பெறப் பாடியுள்ளார். உயர்ந்த ஆராய்ச்சி முடிவுகளைக் கண்டறியும் ஆற்றல் ஆண்களுக்குப் போலவே பெண்களுக்கும் உண்டு. அறிவியல் துறையில் பெரிய ஆராய்ச்சி செய்து உலகப் புகழ் பெற்ற பெண்மணிகளுள் சிறந்தவராக மேரி கியூரி அம்மையாரைச் சொல்லாம். இந்தப் பயிர் முளையில் எவ்வளவோ தொல்லைகட்கு உள்ளாகிப் பின்னர்ப் பெரிய அளவில் விளைந்தது.