பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 87 பாரிசுக்கு வந்தார். பியெர் கியூரின் மாணவியாகச் சேர்த்து படித்தார். ஆசிரியருக்கும் மாணவிக்கும் காதல் கனிந்தது; திருமணம் செய்து கொண்டனர். கியூரியை மணந்ததால் மேரி கியூரி என்னும் பெயருக்கு உரியவரானார் மேரி. பெக்கெரல் அந்தக் காலத்தில் ஹென்ரி பெக்கெரல் (Becquerel) என்னும் அறிவியல் அறிஞர் கதிரியக்கம் (Radio Activity) பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார் பிட்சு - ப்ளெண்ட் (Pitch biende) என்பது யுரேனியம் கொண்ட ஒரு தாதுப் பொருள். இது இரவிலும் ஒளி வீசியது. எனவே, இதனுள் ஒளி வீச்சுக்கு உரிய தனிமப் பொருள் ஏதேனும் இருக்க வேண்டும் என எண்ணினார். இந்த ஆராய்ச்சியை மேரி - கியூரி ஆகியோரிடம் செய்யும்படி ஒப்படைத்தார். மேரியும் கியூரியும் இந்த ஆராய்ச்சியில் முனைந்து ஈடுபட்டனர். பிட்சு-ப்ளெண்ட் (Pitch belene) என்னும் விலை உயர்ந்த தாதுப் பொருளைத் தமக்கு அளிக்கு மாறு ஆஸ்திரிய நாட்டு அரசிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். அதன் பயனாக நிரம்பக் கிடைத்தது. போலோனியம் இருவரும் சோராமல் அந்தப் பொருளைப் பலமுறை காய்ச்சியும் வடித்தும் - காய்ச்சியும் வடித்தும் ஆய்ந்து அதனுள் போலோனியம் (Polonium) என்னும் ஒரு கனிமம் இருக்கக் கண்டனர். அதற்கு, மேரி பிறந்த