பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விழா தந்த விழிப்பு

"சிறந்த சேமிப்பாளன் என்ற பரிசைப் பெற வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை ஏற்பட் டிருக்கிறது. இதற்காகத் தன் தந்தை ஒரு முக்கிய அவசர செலவுக்காக வைத்திருந்த பணத்தை அந்த மாணவன் திருடியிருக்கிறான். அதைக் கொண்டு வந்து பள்ளிச் சிறுசேமிப்பு வங்கியில் கட்டியிருக்கிறான். இதனால் குறிப்பிட்ட அவசர செலவுக்குப் பயன்படுத்த இயலாது அவனது தந்தை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டார். இத னால், சேமிப்பினால் நன்மை ஏற்படுவதற்கு நேர்மாறான முறையில் பாதகம் ஏற்படும்படி யாகிவிட்டது. இதற்குக் காரணமான அந்த மாணவன் கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக் கவும் பட வேண்டியவன் என்பதில் ஐயமில்லை.

தலைவரின் பேச்சு சிங்காரத்தை உலுக்கி விட்டது. பயத்தால் வியர்த்துக் கொட்டியது. அடுத்து தனக்கு என்ன அவமானம் நேரப் போகி றதோ எனக் கண்கலங்கியபடி கூனிக்குறுகி அமர்ந்திருந்தான்.

மீண்டும் தலைவர் தொடர்ந்தார் :

'நேர்மையான முறையில் வீண் செலவைக் குறைத்துச் சேமித்தால் பெரும்பயன் பெற முடி யும் என்பதற்கு உதாரணமாக அமைந்த அறிவா