பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 101

யையும் பாராட்டும் அறிவானந்தத்தின் உயர்ந்த மனநிலையை எண்ணி வியந்தான். பேசும்போது அவன் குரல் தழதழத்தது.

'அறிவானந்தம் உன் உயர்வைப் புரிஞ்சுக் காம இருந்துட்டேன். உன்னிடம் குரோத மனப் பான்மையோட நடந்துக்கிட்டேன். அதுக்கு இப்போ மன்னிப்புக் கேட்டுக்கறேன். உனக்குப் பரிசு கிடைக்கக் கூடாது; நானே பரிசு பெறணும் கிற பேராசையிலே குறுக்கு வழியில் நடந்துட்டேன். அப்பாவோட பணத்தைத் திரு டினேன். எழுதி வச்சிருந்த பேச்சுக் கட்டுரையை உனக்குத் தெரியாமல் களவாடினேன். அதை மனப்பாடம் செய்து, என் சொந்தப் பேச்சைப் போலப் பேசிப் பரிசு வாங்க மோசடியா நடந்தேன். 'உண்மை ரொம்ப நாள் தூங்காது’ங்கி றது முழுக்க முழுக்க உண்மையாயிடிச்சு எல்லா உண்மைகளும் வெளியாயிடுச்சு மத்தவங்க மத்தியிலே அவமானச் சின்னமா நிற்கிறேன்."

தான் செய்த தவறுக்கெல்லாம் மனம் வருந்தி நின்றான் சிங்காரம். அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. அதைக் கண்ட அறிவா னந்தம் மிகவும் இளகிப் போனான். அவனுக்கு என்ன ஆறுதல் கூறித் தேற்றுவது எனத் தெரி யாமல் தடுமாறினான்.