பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விழா தந்த விழிப்பு

யரிடம் செய்த குறும்பு என்ன என்பதை அறிந்து கொள்ளும் பேரார்வம் சுந்தரத்தைக் கவ்விப் பிடித்துக் கொண்டது.

"அப்படி என்னதான்'டா' செய்தான்?"

முருகுவின் தோளை அழுத்தியபடி சுந்தரம் ஆவல் பொங்கக் கேட்டான். முருகுவின் வாயிலி ருந்து வெளிப்படும் வார்த்தைகளை உன்னிப் பாகக் கவனிக்கும் பாவனையில் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த முருகு சிறிது கனைத்த படி ஒரு ஏளனப் புன்னகையைத் தவழவிட்ட வனாய் சுந்தரத்தை நோக்கி,

'நீ ஒழுங்காக வகுப்புக்கு வந்தால் தானே, உனக்கு இதெல்லாம் தெரியும். நீதான் அடிக்கடி மட்டம் போட்டறியே! உனக்கு எங்கே

இதெல்லாம் தெரியப் போவுது'

சுந்தரம் அடிக்கடி வகுப்புக்கு வராததைச் சுட்டிக்காட்டி முருகு பேசியது சுந்தரத்துக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதனால் சுந்த ரத்தின் குற்ற மனம் குறுகுறுக்கவே செய்தது.