பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விழா தந்த விழிப்பு

னார்' என்று ஆசிரியர் மனைவியிடம் பொய் கூறியிருக்கிறான். அந்தம்மாவும் அவன் கூறி யதை உண்மை என நம்பியிருக்கிறார். பழுத டைந்த வானொலிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கடை வீதிக்கும் போயிருக்கிறார். அங்கே ஆசிரியர் இல்லை. ஏமாற்றத்தோடு ஆசி ரியர் மனைவி திரும்பியிருக்கிறார். வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியர் இதை அறிந்தபோது சிங்கா ரத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டார். அவ்வாறு அவர் கோபம் கொண்டது நியாயம் தானே?' வினா வடிவில் தன் நியாய உணர்வை வெளிப்படுத்தினான் முருகு.

இவர்கள் விவாதம் முற்றுப் பெறுவதற்கு முன்னதாகவே சிங்காரமும் அங்கே வந்து சேர்ந் தான். நண்பர்கள் தான் செய்த குறும்பைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதை ஊகித்துணர்ந்தவனாய் அவர்களை நோக்கி ஒருவித ஏளனப் பார்வை பார்த்தவனாய்.

"நான் பெஞ்சு மேலே நின்னதைப் பற்றித் தானே பேசிச் சிரிக்கிறீங்க? நான் எப்போதாவது ஒரு தடவைதான் பெஞ்சு மேலே நிற்கிறேன். முருகுவோட உயிர் நண்பன் அறிவானந்தம் தினந்