பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 39

'நாளைக்கு என்ற கவலை நமக்கு ஏன்? அப்பா, அம்மா நம்மை நன்றாகப் படிக்க வைக்கப் போறாங்க. படித்து முடித்தபின் நாம, வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கப் போகி றோம். அப்புறம் ஏன் நாளையப்பத்தி நாம் கவ லைப்படனும்? அறிவானந்தம் நாளைக்கு என்று கவலைப்பட்டுத்தான் தீரனும் வேறு வழி இல்லை ஏன்னா அவன் குடும்ப நிலை அப்படி! ஆனால் நான் ஏன் கவலைப்படனும்?' என்று மூச்சு விடாமல் பேசி முடித் தான். அவன் முகத்தில் வெற்றிப் பெருமிதமும் பெருமையும் காணப்பட்டது.

அறிவானந்தத்தின் குடும்பத்தைத் தாழ்த்தி யும் அவனை ஏளனப்படுத்தியும் பேசியது முரு குக்குப் பிடிக்கவில்லை. சரியான பதிலடி கொடுக்க நினைத்தான்.

‘'எதிர்கால நம்பிக்கையைவிட உனக்குக் கர்வமும் திமிரும்தான்'டா அதிகமா இருக்கு அவன் ஏழைங்கிறதை எவ்வளவு எகத்தாளமா சுட்டிக் காட்டறே, சேமிப்பு மூலம் அவன் காசு சேர்க்கிறான். நீயோ கண்டதைத் தின்னு