பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விழா தந்த விழிப்பு

முருகுவின் கேள்வி சிங்காரத்துக்கும் பிடித் திருந்தது. காரணத்தை அறிய ஆவலோடு இரு வரும் அறிவானந்தத்தை ஏறிட்டு நோக்கினர். அறிவானந்தம் தான் சேமிக்கத் தொடங்கியதை விளக்கினான்:

"ஆரம்பத்தில் எனக்குக் கூட சேமிப்பில் அவ்வளவு விருப்பம் ஏற்படவில்லை. ஆனால், 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் என்று தொகை அதிகரிக்க ஆர்வமும் அதிகரித்தது. பள்ளிச் சேமிப்பு வங்கியில் பணம் நாளுக்கு நாள் கூடி யது. தொகை பெருகப் பெருக ஆர்வமும் அதி கரித்தது. என்னுடைய வீண் செலவுகள் குறைந் தது. சின்ன நீரோடை, நீர் பெருகப் பெருக அரு வியாகும். அதுவே பின்னர் நீர்ப் பெருக்கால் நதியாகும். அதே மாதிரி இப்ப என் கணக்கிலே ஒரு கணிசமான தொகை சேர்ந்திருக்கு. ஏழை யாக இருக்கிற எனக்கும் எங்கம்மாவுக்கும் இதுவே பெரிய பாதுகாப்பு'ன்னு நினைக் கிறேன்!” தன் சேமிப்பு முறையைச் சொல்லி முடித்தான் அறிவானந்தம்.

அறிவானந்தத்தின் சேமிப்பு முறையும் அதில் அவன் காட்டும் ஆர்வமும் முருகுக்கு