பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விழா தந்த விழிப்பு

இனிமேல் அந்த மூலைக்கடை ஒட்ட லுக்குப் போகவே கூடாது'டா அங்கே பலகாரம் சாப்பிட்டுத்தான் வயிற்றுப் போக்காயிடிச்சு. அந்த ஒட்டல் ரொம்ப மோசம்'டா'

இதைக் கேட்டபோது காளிமுத்துவுக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. உடனே அதற்குச் சூடாகப் பதில் சொன்னான்.

'அந்தக் கடை பலகாரம் மட்டும் மோசம் இல்லை. உன் வயிறும்தான். வயிற்றைக் குப்பைத் தொட்டிபோல ஆக்கிட்டா நோய் வராமவேறெ என்ன வரும்?' என்று இடித்துக் கூறினான்.

அப்போது காளிமுத்து எதையோ நினைவு படுத்திக் கொண்டவன்போல் பேசினான்:

'இப்பதான்'டா ஞாபகத்துக்கு வருது. கோடை விடுமுறையில் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே பாட்டியும் மாமாவும் ஆசை ஆசையாய் எதையெல்லாமோ தின்னக் கொடுத்தாங்க. தின்னக் கிடைச்சதையெல்லாம் ஒரு பிடி பிடிச்சேன். விளைவு கடுமையான