பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 67

முருகு கூறியதைக் கேட்டபோது அறிவா னந்தம் மீது பரிவும் பச்சாதாபமும் ஏற்பட்டது. அவனுக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி

மனம் வருந்தினான்.

'அறிவானந்தம் ரொம்பப் பாவம்'டா அவ னுக்கு உதவி செய்ய யாருமே இல்லை. அவன் வெளிப்படுத்திய அனுதாப உணர்வு வார்த்தை

களாக வெளிவந்தன.

"ஆமாடா. அறிவானந்தத்தின் அம்மா. ரொம்ப நல்லவங்கடா. யாருடைய துணையோ வசதியோ இல்லாமல் பலகாரம் சுட்டு விற்று வாழ்க்கை நடத்துறாங்க. அறிவானந்தத்தின் அப்பா இறந்து போய்விட்டாலும் அறிவானந்தத் துக்கு எந்தக் குறையும் வராம அவனை வளர்க்க றாங்க. அவன் படிச்சு பெரிய வேலைக்குப் போய் நிறைய சம்பாதித்து, தன்னைச் செம்மை யாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை யோடு இருக்காங்க. அறிவானந்தமும் அவன் நம்பிக்கைக்கேற்ப நன்றாகப் படித்து வருகிறான். இப்ப அவன் நிலை பரிதாபமாயிருக்கே?"