பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை- I 8 I ஆதலால் 1832-ம் வருஷத்தில் பிரான்ஸில் ப்ளேஸ் என்பவர் கர்ப்பத்தடைக்காக வேறு சில விஞ்ஞான முறை களைத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மாஞ்செஸ்டர் நகரில் வெளியிட்டார். அதன் பின் டாக்டர் நெளல்டன் என்பவர் 'தத்துவ சாஸ்திரப் பலன்கள்' என்னும் ஒரு கர்ப்பத் தடை நூலை 1833-ம் வருஷத்தில் வெளியிட்டார். இப்படி இவர்கள் கர்ப்பத்தடை முறைகளைச் சொல்லியபோதிலும், இங்கிலாந்தில் இவை அதிகமாய் பரவாமலே இருந்து வந்தன. பிரான்ஸ் தேசத்திலுள்ளவர்களே அனுஷ்டித்து வந்தார்கள். இவ்விதமாக 40 வருஷங்கள் கழிந்தன. அதன்பின் 1873-ம் வருஷத்தில் பிரிஸ்டல் நகரத்திலிருந்த புஸ்தக வியாபாரி ஒருவர் டாக்டர் நெளல்டன் எழுதிய நூலை அச் சடித்து விற்கலானர். அவ்வளவுதான் உடனே அரசாங்கத் தார் அதை ஒழுக்க விரோதமான நூல் என்று கூறி அவரைச் சிறையிலிட்டார்கள். அதைக் கண்டதும் என்ன அநீதி என்று மனம் கொதித்து அணிபெஸன்ட் அம்மை யாரும், பிராட்லா என்னும் பெரியாரும் 'அப்படியானல் நாங்கள் அதை விற்கிருேம். அரசாங்கமே, செய்யக்கூடிய தைச் செய்துகொள்' என்று அந்த நூலை இன்ன இடத்தில் இன்ன தேதியில் விற்கப் போகிருேம் என்று சர்க்காருக்கு அறிவித்துவிட்டு, அதே யிடத்தில் அதே தேதியில் விற்ருர் கள். அரசாங்கம் இவர்களைக் கைது செய்து நீதி மன்றத்தில் கொண்டுபோய் நிறுத்திற்று. ஆனல் ஹைகோர்ட்டார் அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்த வழக்கு இங்கிலாந்திலும் மற்ற நாடுகளிலும் கர்ப் பத்தடை முறைகளைப்பற்றி எல்லோரும் கேட்கும்படியாகச் செய்தது. இங்கிலாந்தில் டாக்டர் ட்ரைஸ்டேல் என்பவர் 1877 - ம் வருஷத்தில் 'மால்துாஸியன் சங்கம்' என்று ஒரு சங்கம் அமைத்து கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய லானர். 1881 - ம் ಲ್ಗಳ್ಗಿ ஹாலந்து தேசத்தில் டாக் டர் ஜேக்கப்ஸ் என்னும் பெண் டாக்டர் கர்ப்பத்தடைப் பிர சாரம் செய்ய ஆரம்பித்து அதற்காகப் பல நர்ஸுகளைப் பயிற்றுவித்து மறு வருஷதில் கர்ப்பத்தடை ஆஸ்பத்ரி ஒன்று ஆரம்பித்து நட்த்தலானர். அந்த தேசத்து சர்க் காரும் அதற்கச் சீக்கிரமாக ஆதரவு அளிக்க ஆரம்பித் தார்கள்.